இரு தாக்குதல்களை நடாத்தியதும் பயங்கரவாதி பிரன்டனே: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Sunday, 17 March 2019

இரு தாக்குதல்களை நடாத்தியதும் பயங்கரவாதி பிரன்டனே: பொலிஸ்


நியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் தற்போது மேலும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் நியுசிலாந்து பொலிசார்.

இதனடிப்படையில் குறித்த சம்பவங்களின் பின்னணியில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் இத்துடன் தொடர்பற்றவர்கள் எனவும் பிரன்டன் டரன்ட் எனும் 28 வயது அவுஸ்திரேலிய பிரஜையின் தனி நபர் செயற்பாடே இரு இடங்களிலும் இடம்பெற்றிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முதலில், அல்நூர் பள்ளிவாசலில் தாக்கதலை மேற்கொண்டுவிட்டு, லின்வுட் பள்ளிவாசல் சென்று அங்கு தாக்குதல் நடாத்த முனைந்த வேளையிலேயே, அங்கிருந்த அப்துல் அசீஸ் என அறியப்படும் தனது கையில் இருந்த பிறிதொரு உபகரணத்தால் பிரன்டனைத் தாக்கி சண்டையிட்டுள்ளதுடன் அங்கு துப்பாக்கியைக் கைவிட்டு ஓடிச் சென்ற பிரன்டன், காரில் இருந்து வேறு துப்பாக்கியை எடுக்க முனைந்த வேளையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக விபரம் வெளியிடப்பட்டுள்ளது.லின்வுட் பள்ளிவாசலில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியொருவர் வெளியிட்ட தகவ்களை இவ்விணைப்பில் காணலாம்:  https://www.sonakar.com/2019/03/blog-post_668.html

இந்நிலையில், வெள்ளையின மேன்மைவாத அடிப்படையிலான பயங்கரவாத தாக்குதலை பிரன்டன் தனி நபராகவே திட்டமிட்டு செயற்படுத்தியிருப்பதாக தற்சமயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பிரன்டன் மீண்டும் எதிர்வரும் 5ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment