பயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

பயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்!நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்து அவனை விரட்டியடித்த நபர் பற்றி சம்பவத்தில் உயிர் தப்பிய மசாஹ்ருடின் என்பவரின் சாட்சியத்தின் ஆதார அடிப்படையில் தகவல் வெளியிட்டுள்ளது நியுசிலாந்து ஹெரால்ட் பத்திரிகை.


அவரது கூற்றுப்படி இறுதிக் கட்டத்தில் துப்பாக்கியைப் பறிகொடுத்த நிலையிலேயே குறித்த நபர் பள்ளிவாசலை விட்டு வெளியேறி தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.  எனினும் பறித்தெடுத்த நபர் அதனை இயக்கத் தெரியாது தடுமாறிக் கொண்டிருந்ததாகவும் மசாஹ்ருடின் தெரிவித்துள்ளார்.அந்நூர் பள்ளிவாசலில் 41 பேரும் லின்வுட் பள்ளிவாசலில் 7 பேரும், காயப்பட்ட ஒருவருமாக மொத்தமாக இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, தனது பயங்கரவாத திட்டத்தை முன்னரே பகிரங்கப்படுத்தியிருந்த பிரன்டன் பேஸ்புக் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டே குறித்த தாக்குதலை நடாத்தியிருந்தமையும் வாகனத்தில் பெருமளவு ஆயுதங்களைக் கொண்டு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment