ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மஹிந்தவிடமிருந்து தொலைபேசி அழைப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 17 March 2019

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மஹிந்தவிடமிருந்து தொலைபேசி அழைப்பு


அவ்வப்போது சலசலப்பை உருவாக்கும் தகவல்களை வெளியிட்டு வரும் ரஞ்சன் ராமநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

வாழ்த்து தெரிவித்த கையோடு, ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கும் கொகைன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலையும் தமக்கு வழங்குமாறு மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இதனை ஏற்றுக்கொண்டுள்ள ரஞ்சன், மஹிந்தவுக்கும் பிரதியொன்றைத் தருவதாக தெரிவித்துள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை சபாநாயகருக்கும் இதுவரை அவ்வாறு ஒரு பட்டியல் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment