ரணில் – மைத்ரிக்கு நீதிமன்ற அழைப்பாணை

போலிக் கையெழுத்திட்டு ஆவணம் தயாரித்த வழக்கில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலளார் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கெதிரான முறைப்பாட்டாளர்களான ஜனாதிபதியும் பிரதமரும் குறித்த வழக்கின் விசாரணைக்கு ஜுலை மாதம் 17ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதிலும் இருவரும் தமது கடமைகள் நிமித்தம் சமூகமளிக்க இயலாது என எழுத்து மூலம் தெரிவித்திருந்ததையடுத்து விசாரணை ஜுலை 17ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.