நீதிபதி சரவணராஜா இராஜினாமா: மனோ விசனம்! - sonakar.com

Post Top Ad

Friday 29 September 2023

நீதிபதி சரவணராஜா இராஜினாமா: மனோ விசனம்!

 உயிரச்சுறுத்தலின் பின்னணியில் நீதிபதி சரவணராஜா இராஜினாமா செய்திருப்பதானது அரச நிர்வாகம் தோல்வியடைந்திருப்பதைக் காட்டுவதாக தெரிவிக்கிறார் மனோ கணேசன்.


சுயாதீன நீதித்துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வரும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக உள்ள நிலையில், நீதிபதியொருவர் தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இராஜினாமா செய்துள்ளார்.


இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன், நீதிபதிகள் போலி தேசியவாதிகளால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வருவதன் பின்னணியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது அரசின் தோல்வியை புடம்போட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment