கைவிடும் பெரமுன உறுப்பினர்கள்: பசில் கவலை - sonakar.com

Post Top Ad

Wednesday 14 June 2023

கைவிடும் பெரமுன உறுப்பினர்கள்: பசில் கவலை

 



பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் ரணிலை ஆதரிப்பதால் பசில் ராஜபக்ச பாரிய கவலையில் இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமைச்சுப் பதவிகளைக் கோரும் பசில் ஆதரவாளர்களைத் தவிர ஏனையோர் ரணில் தலைமையில் இயங்குவதை விரும்புகின்ற அதேவேளை, கட்சி முடிவுகளைத் தாண்டி நேற்றைய தினம் ரணிலோடு விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.


நிமல் லன்சா போன்றோர், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலையே ஆதரிக்கப் போவதாக பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment