பாடசாலை அனுமதியில் ‘முகவரி’ மோசடி: அகில விசனம்!

வாகன தரிப்பிடம், வெளிநாட்டுத் தூதரகங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு முகவரிகளையும் பயன்படுத்தி முதலாம் ஆண்டு அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ்.

இவ்வாறு மோசடி இடம்பெற்ற சுமார் 25 பாடசாலைகள் தொடர்பில் விபரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவை தொடர்பில் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் இன்றைய தினம் கிரிபத்கொட விகாரமகாதேவி பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.