மழ்ஹேரியன் 2000 அமைப்பினால் வகுப்பறைத் தளபாடங்கள் அன்பளிப்பு

சாய்ந்தமருது, லீடர் M.H.M அஸ்ரப் வித்தியாலயத்தில் 2017  முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வித்தியாம்பர  நிகழ்வும் வகுப்பறைத் தளபாடங்களை கையேற்கும் நிகழ்வும் பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் இன்று இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சாய்ந்தமருது, மழ்ஹேரியன் 2000 போய்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

2017 முதலாம் ஆண்டில் புதிதாக சேர்ந்துள்ள 60 மாணவர்களுக்கான வகுப்பறைத் தளபாடங்களை மழ்ஹேரியன் 2000 போய்ஸ் அமைப்பின் மூலம் இப் பாடசாலைக்கு அன்பளிப்பாக இன்று கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வி்ல் மழ்ஹேரியன் 2000 போய்ஸ் அமைப்பின் சார்பாக டொக்டர். அஸ்லம் பாறுக் சிறப்புறை  நிகழ்த்தியதுடன்,  பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

-அமீர் அலி றியால்