ரணிலின் சூழ்ச்சியே கைதுக்குக் காரணம்: விமல் ஆவேசம்

தன்னையும் இன்னும் சிலரையும் கைது செய்வதற்கான திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே வகுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச.

இன்றைய தினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளா. இந்நிலையில் கைதாவதற்கு முன்னராக செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ள விமல், இலங்கையை சீனாவின் காலனித்துவத்துக்குட்படுத்துவதை எதிர்ப்பவர்களையே இவ்வாறு ரணில் குறி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.