சு.க பிரதமர் வேட்பாளராக கோத்தபாயவை முன்மொழிய முஸ்தீபு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை முன்மொழிய சு.க சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சி செய்வதாக அறியமுடிகிறது.

எதிர்வரும் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில் இணக்கம் காணப்படுகின்ற நிலையில் கோத்தபாயவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சிகள் இடம்பெறுகிறது.

எனினும், தேசிய அரசு பதவிக்காலம் முடியும் வரை தொடரும் என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளமையும் மஹிந்த ராஜபக்ச அணியினர் உள்ளூராட்சித் தேர்தலைக் குறிவைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியை உருவாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.