ஆதில் மறைவு: லண்டனிலிருந்து ஒரு கடிதம்!

அப்துல்லாஹ் ஹசரத்தின் மறைவு தந்த சோகத்தை சுவாசிச்சு முடியுறதுக்குள்ள ஆதில் பாக்கீர் மார்க்கார்… அதிர்ச்சியாத்தான் இருந்தது.. வடஸ்அப்ல .. வைபர்லல்லாம் அன்னைக்கு விசயத்தை கேட்ட எல்லோருக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்கனு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டியிருந்துது…

தகவல் கிடைச்ச அந்த இடைவெளியில ஆதிலுக்கு நெருக்கமா இருந்த ரெண்டு பேரை தேடி பிடிச்சு துருவிக்கிட்டிருந்தன்.. நான் கேட்ட முதல் கேள்வி அவரோட GP (மருத்துவர்) யாரு? அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கல..

அப்புறம் எவ்ளோ நாளா அவருக்கு டெம்பரச்சர் இருந்துது..? சரியா சொல்ல முடியலனு தான் சொன்னாங்க.. இருந்தாலும் அரசல் புரசலா அவங்கவங்க சொன்ன தகவலை வச்சு சில விசயங்கள ஊகிச்சுட்டு… அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள ஜனாஸா அறிவித்தலை பிரசுரிக்க ஓகே சொல்லியிருந்தன்… மற்ற விபரங்களை வெளியிடல.

இன்று 15ம் திகதி.. இன்னைக்கு எனக்கு Flu Injection… இப்பல்லாம் இங்கே வைத்தியசாலைகள்ல இதுக்கு நீண்ட காத்திருப்புங்கறதுனால சூப்பர் மார்க்கட்கள்ல கூட ஐந்து பவுண் எடுத்துட்டு 2..3 செக்கன்ல முடியற இந்த இன்ஜக்சன போட்டுடுறாங்க…

அந்த அளவுக்கு இந்த நாட்டுல இதன் முக்கியத்துவம் அதிகரிச்சிருக்கு… போன இடத்துல என் டொக்டர் மேசையில இருந்த இந்த பச்சைக் கலர் படத்தை போட்டோ பிடிச்சுட்டு வந்தன்.. கொஞ்சம் வாசிச்சா நான் என்ன சொல்ல வாறன்னு புரியும்..

சோ.. நான் ஆதிலோட GPய தேடினதோட மறு பக்கத்தால அவரோட நண்பர் ஒருவர் கிட்ட துருவினதுல கிடைச்ச இன்னொரு விசயம் தான் அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலயே sore throat (தொண்டைப் புண்.. தொண்டை வலினு சொல்லுவாங்க) இருந்துதுங்கற தகவல்..

சரி அதுக்கு என்ன செஞ்சிங்க? வழக்கமா இங்கே இந்த ‘சீசனை’ குறைச்சு மதிப்பிடற எல்லோரும் செய்ற மாதிரி … இலங்கைல ‘ஹோல்ஸ்’னு முன்ன ஒரு டொபிஃ வந்துதே… (இப்பருக்கா தெரியல) அது மாதிரி லாக்கெட்ஸ்ங்கற டொபிஃயை போட்டுட்டு கணக்கில எடுக்காம விட்டுருக்காங்க..

காய்ச்சல் தானேனு பரசிட்டமோல்… எடுத்துட்டு இறைவன் நாட்டப்படி படுக்கையில் சாய்ந்த ஆதில் இன்று நம்மோடு இல்லை…

இதில நமக்கு ஏதும் படிப்னை இருக்கா..? நேற்று ராத்திரி நண்பர் ஸமான் உரையாடிக்கொண்டிருக்கையில இன்னுமொரு விசயத்தை சுட்டிக் காட்டினாரு… இலங்கையில இருந்த இளைஞனுக்கு ஸ்கொர்லஷிப் ஏற்பாடு செய்து லண்டனுக்கு வரவைச்சு… இங்கே இந்த உலகத்தின் பயணத்தை முடித்துக் கொள்ள இறைவன் வகுத்த திட்டத்தை அவன் மாத்திரமே அறிவான்!

யெஸ்…அதே நேரம் ஒவ்வொரு விசயத்துலயும் இறைவன் ஒரு படிப்பினைய வைச்சிருக்கான்…

UKல.. உயர் கல்விங்கறது இப்போ ஓரளவு எல்லா வகையிலயும் அனேகமானவங்களுக்கு சாத்தியமான விசயங்கறதுனால… இன்னும் அதுக்கான கிராக்கி இருக்கு.. ஆனா இதை படிக்கிற நீங்க.. யுகேல போய் கொஞ்ச நாள் தங்கியிருக்கப் போறங்கற ஐடியாவுல உங்களுக்கு தெரிஞ்சவங்களோ.. உறவுக்காரங்களோ யாரு வந்தாலும் முதலாவது பண்ண வேண்டிய ‘அட்வைஸ்’… போனதும் முதல்ல டொக்டர் கிட்ட பதிங்க! GP Registration பண்ணிருங்கங்கறதுதான்…

Visit விசால வாறவங்க இப்படி பதிய முடியாது.. சோ, வரும்போதே அதுக்கான மாற்று வழிய .. அதாவது இங்கே வைத்திய தேவை வந்தா சமாளிக்கிறது எப்படிங்கற வழிமுறையோட இல்லைன்னா… இங்கே ‘பணம் செலுத்தி’ சிகிச்சை பெற்றுக்கொள்ள தயாரா வாங்க…

அடுத்தது இங்கே இருக்கிற கால நிலை மாற்றங்கள் பற்றின அறிவும் அவசியமா தேவை… குறிப்பா ஜுலை ஆகஸ்ட்டுக்கு பிறகு வாறவங்க…Flu Season னு சொல்லப்படற இந்த சீசனை எதிர்பார்த்து வாங்க… டொக்டர் கிட்ட பதிஞ்சதும் அவங்களா கேட்பாங்க.. இல்லைன்னா கூட நீங்களா கேட்டு இந்த Flu Jab எடுத்துருங்க…

ஆதிலுக்கு மாதிரி அதை செய்ய டைம் இல்லாம போனா ஆகக் குறைஞ்சது.. பாமசி.. சூப்பர் மார்க்கட்கள்ளயாவது இந்த விசயங்களை செஞ்சிருங்க..

நாம பிறந்து வளர்ந்த நாட்டிற்கும் .. இந்த நாடுகளுக்கும் இருக்கிற மாற்றங்களை அலட்சியம் பண்ணாதிங்க…

மேலே படத்துல இருக்கிறது ஆதிலோட பிரதர் அசாப்ஃ.. ஜனாஸாவ எடுத்துப் போக வந்திருந்தவரோட … சின்னதா ஒரு இரங்கல் சந்திப்பு…

-Irfan Iqbal

https://www.facebook.com/irfaninweb