தமிழீழம் வரைபடத்திலும் காணாமல் போய்விட்டது: மஹிந்த

உள்ளூராட்சி தேர்தலில் தமது கட்சிக்கு தேசிய அளவில் கிடைத்துள்ள வெற்றி மூலம் தமிழீழம் என காண்பிக்கப்பட்டு வந்த வரை படமும் குறுகிவிட்டது என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

பெரும்பாலான உள்ளூராட்சி அதிகார சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ள நிலையில் தமிழீழ வரைபடத்திலும் மாற்றம் வந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததும் தமிழீழ கோரிக்கையும் தோற்கடிக்கப்பட்டு விட்டது என தனது ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வந்தமை நினைவூட்டத்தக்கது.