முசலி பிரதேச சபையையும் கைப்பற்றுவோம்: ஹக்கீம் சவால்!

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பல முனை சவாலை உருவாக்கி வரும் ரிசாத் பதியுதீனின் ஆளுமையிலிருந்து மன்னார், முசலி பிரதேச சபை இத்தேர்தலுடன் விடுவிக்கப்படும் என சூளுரைத்துள்ளார் ரவுப் ஹக்கீம்.

கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் கூட கிழக்கு மாகாணத்தில் தமது கட்சியின் விசுவாசிகளை அசைக்க முடியவில்லையென தெரிவித்துள்ள அவர், மன்னாரில் முஸ்லிம்களின் ஆளுமைக்குட்பட்டிருக்கும் ஒரேயொரு பிரதேச சபையான முசலி பிரதேச சபையும் இம்முறை தமது கட்சிக்குக் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரு கட்சிகளும் தாம் சேர்ந்து போட்டியிடாத இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்தும் ஏனைய இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக வாக்குப் பிச்சை கேட்டும் வருவதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.