இன்றே வீட்டுக்குப் போகத் தயார்; மைத்ரி!

தனது பதவிக்காலம் தொடர்பில் நிலவும் சந்தேகத்துக்குத் தெளிவு பெறவே உச்ச நீதிமன்றில் அபிப்பிராயம் அறியப்பட்டதாக விளக்கமளித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தான் நாளையல்ல இன்றே வேண்டுமானாலும் வீட்டுக்குப் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பதவியில் தங்கியிருக்கும் ‘அவா’ தனக்கில்லையென தெரிவித்திருக்கும் அவர், இது தான் ஜனநாயகம் எனவும் விளக்கமளித்துள்ளார்.

எனினும், மைத்ரி ஆறு வருடங்கள் பதவி வகிக்க முடியுமாக இருந்தால் தானும் மீண்டும் போட்டியிடலாம் என மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.