லண்டன் பயணத்தை இரத்துச் செய்தார் ட்ரம்ப்!

டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய இராச்சியத்துக்கு விஜயம் செய்வதற்கு நாடாளுமன்றுக்குள்ளும் வெளியேயும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

இங்கிலாந்தின் உள்நாட்டு விவகாரத்தில் கருத்துக் கூறப்போய் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்ட போதிலும் ட்ரம்ப் வரவேற்கப்படுவார் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது பயணத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஒபாமா நிர்வாகம் லண்டனில் இயங்கிய பழைய தூதரகத்தை சில்லறை விலைக்கு விற்று விட்டு தற்போது வேறு இடமொன்றில் 1.2 பில்லியன் டொலர் செலவில் தூதரகத்தை நிர்மாணித்திருப்பதாகவும் அந்த ‘டீல்’ தனக்குப் பிடிக்காத காரணத்தினால் தான் அங்கு செல்லவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ட்ரம்ப் மேலும் ஒரு இராஜாங்க விஜயம் நிமித்தம் இங்கிலாந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் அதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.