முசலியை ஆக்கிரமித்து ‘கோயில்’ கட்ட முயற்சி

1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முசலிப்பிரதேச முஸ்லிம்  மக்கள் யுத்தம் முடிந்ததன் பின்பு மீண்டும் தமது தாயாக பூமியில் மீள் குடியேறிவருகின்றனர்.

இந்நிலையில், பிறிதாரு குழுவினர் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வெள்ளிமலை கிராமத்தை  அரிப்புக்கு    சொந்தம் என எல்லை போட்டு அங்கு கோவில் அமைக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளனர்.

பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த இடம் வெள்ளிமலை கிராம மக்களுக்கு சொந்தம் என பிரதேச செயலாளர் தெளிவாக எடுத்து சொல்லியும் அதை பொருட்படுத்தாமல் குறித்த குழுவினர் செயற்படுகின்ற அதேவேளை வடமாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட முசலி பிரதேசத்தை சிதைப்பதற்கு வடமாகாண சபையினால் தூண்டப்பட்டே இவ்வாறு நடைபெறுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

-எ.எம்.றிசாத்