‘மைலோ’வுக்கு எதிராகப் போராடப் போகும் ‘மைத்ரிபால’! (video)

மைலோ குளிர்பானத்தில் காணப்படும் ‘சர்க்கரை’யின் அளவு குறித்து தெளிவான விளக்கம் இல்லாதமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, குறித்த நிறுவனம் தகுந்த நடவடிக்கையெடுக்கத் தவறினால் இதற்கெதிரான முழு அளவிலான ‘பிரச்சாரம்’ ஒன்றை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் இது குறித்து கவனம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், தான் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இது குறித்து விசாரித்ததாகவும் அப்போதிருந்ததை விட தற்போது சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதாகவும் அது 5 வீதமாகக் குறைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் புகையிலை நிறுவனங்களைத் தாம் பகைத்துக் கொண்டதாகவம் தற்போது மைலோ உற்பத்தியாளர்களைப் பகைத்துக் கொள்ளவும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.