இஸ்ரேலுடன் இரகசிய பேச்சுவார்த்தை; சர்ச்சையில் ஐ.இராச்சிய MP

தனிப்பட்ட விடுமுறைக்குச் செல்வதாக அறிவித்து இஸ்ரேலுக்குச் சென்ற ஐக்கிய இராச்சிய சர்வதேச விவகார அபிவிருத்திக்கான செயலாளர் ப்ரீத்தி பட்டேல், அங்கு சென்ற வேளையில் அமைச்சரவைக்கு அறிவிக்காமலேயே இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாஹு உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள விவகாரத்தால் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி பட்டேல் தனது சந்திப்பு வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வ நடைமுறை பின்பற்றப்படாத நிலையில் சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் அவர் தற்போது மன்னிப்புக் கோரியுள்ள போதிலும் அமைச்சரவை மட்ட விசாரணைக்குழு அமைத்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி மற்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.

விடுமுறையில் செல்வதாகக் கூறிச் சென்றவர் அங்குள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்துக்கும் அறிவிக்காது அரச விவகாரங்கள் குறிததுக் கலந்துரையாடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.