இலவச Wi-Fi திட்டம்: கொழும்பில் மேலும் புதிய இடங்கள்

கூட்டாட்சி அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலவச வை-பை திட்டத்தின் அடிப்படையில் கொழும்பில் 10 இடங்கள் ஏலவே இயங்கி வரும் நிலையில் மேலும் 20 மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கிறது.

நகர் எல்லைக்கும் 100 இடங்களில் இவ்வாறான வை-பை வலயங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் விரைவில் நாடு பூராகவும் இதற்கான பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டாட்சி அரசாங்கம் நிர்வாகப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.