தங்கக் கடத்தல்: விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது

டுபாயிலிருந்து வந்த விமானத்தில் 40 மில்லியன் ரூபா தங்கத்தைக் கடத்தி வந்த கொழும்பைச் சேர்ந்த இரு பெண்கள் இன்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடிக்கடி டுபாய் சென்று வரக்கூடிய இவ்விருவரும் தொழில்சார் நிபுணர்கள் போன்று காட்சியளித்து நீண்ட காலமாக இவ்வாறு தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாகரீக ஆடையணித்து இடுப்பைச் சுற்றி சிறு பக்கற்றுகளில் தங்கத்தைக் கட்டி வைத்துக் கொண்டு இவ்விருவரும் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றதாகவும் அவ்வேளையிலேயே சுங்க அதிகாரியொருவரினால் தடுக்கப்பட்டு மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.