ஐ.நா செல்வதைத் தவிர்க்கும் ஆங் சூ கீ!

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் வகைதொகையின்றி இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ளார் ஆங் சூ கீ.

இன்றைய தினம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாட அவசரமாகக் கூடுகின்ற நிலையில் தமது இராணுவம் ‘நல்லதையே’ செய்வதாக தெரிவித்து வரும் ஆங் சூ கீ, ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆங் சூ கீ தனது பயணத்தை ரத்துச் செய்துள்ளமையும் அவருக்கு 1991ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.