கட்டாரிலிருந்து புதிய கடல் வழி போக்குவரத்து பாதைகள்

வளைகுடா அரபு நாடுகளுடன் ராஜதந்திர முறுகலில் சிக்கியுள்ள கட்டார், தோஹாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி கடற்போக்குவரத்து பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் கட்டார், ஹமத் துறைமுகத்திலிருந்து ஓமான், குவைத், பாகிஸ்தான்,துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளுக்கான நேரடி கடல்வழி போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பகுதியூடாக இப்புதிய போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளமையும் அரபு நாடுகளுக்கிடையிலான முறுகல் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.