ஹஜ் காலத்தில் தடைகளை நீக்குங்கள்: கட்டார்

ஹஜ் காலத்தில் சவுதி அரேபியாவுக்கு தமது நாட்டு பிரஜைகள் பயணிப்பதையும் ஹஜ் கடமையை சுமுகமாக நிறைவேற்றுவதையும் உறுதி செய்யும் பொருட்டு தரை மற்றும் வான் வழிப் போக்குவரத்து தடைகளை நீக்கும் படி சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது கட்டார்.

கட்டார் பிரஜைகள் தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் தவிர்ந்த ஏனைய விமான சேவைகள் ஊடாக பயணிக்கலாம் என சவுதி அரேபியா முன்னர் அறிவித்திருந்தது.

எனினும், இவ்வாறான வரையறைகளை ஹஜ் காலத்தில் முழுமையாக நீக்கி தரைவழிப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கட்டார் கோரிக்கை விடுத்துள்ளது.

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக வான் வழிப் போக்குவரத்துப் பாதைகளைத் திறந்து விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.