அமைச்சர்களின் ‘ஊழல்களை’ வெளியிடுவேன்: விஜேதாச பாய்ச்சல்!

ரவி கருணாநாயக்கவை அடுத்து விஜேதாச ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் நல்லாட்சி எனும் பெயரில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை பகிரங்கப்படுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் அர்ஜுன் மகேந்திரனிடம் அமைச்சரவையில் உள்ள பலர் பணம் பெற்றதாகவும் அதன் விபரங்களை விரைவில் வெளியிட நேரிடும் எனவும் விஜேதாச தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிலர் விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதனை முறியடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளதோடு மஹிந்த ராஜபக்சவும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.