ராஜிதவிடம் நஷ்ட ஈடு கோரி மிரட்டும் மஹிந்த

மஹிந்த ராஜபக்ச குடும்பம் வெளிநாடுகளில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வரும் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் பெருந்தொகை மான நஷ்ட ஈடு கோரி வழக்குத்தாக்கல் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.

கடந்த இரண்டு வருடங்களில் முதற்தடவையாக இவ்விடயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள மஹிந்த, ராஜித ஆதாரமற்ற பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணத்தைப் பதுக்கி வைத்து இலங்கையின் முதலாவது ட்ரில்லியனயராக மஹிந்த உருவாகியுள்ளதாக மங்கள சமரவீரவும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.