விஜேதாசவை பதவி நீக்க அழுத்தம்!

ஆளுங்கட்சியிலிருந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொள்ளும் விஜேதாச ராஜபக்ச பதவி நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக அறியமுடிகிறது.

விஜேதாச ராஜபக்ச தொடர்ச்சியாக அரச விரோத கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மக்களுக்காக மீட்கும் வரை போராடப்போவதாக தெரிவித்திருந்தமை பாரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.