விஜேதாச தொடர்ந்து தவறிழைக்கிறார்: ஹர்ஷ

அமைச்சரவையில் எல்லோரும் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட கருத்துக்கள் எனும் போர்வையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, விஜேதாச தொடர்ந்தும் தவறிழைப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டதா குத்தகைக்கு விடப்பட்டதா என்பதைக் கூட தெரியாத நிலையிலேயே விஜேதாச கருத்துரைப்பதாக முன்னதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன விசனம் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஹர்ஷவும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.