முன்னாள் DIGக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு!

முன்னாள் காலி மாவட்ட எஸ்.எஸ்.பியாகவும் பின் டி.ஐ.ஜியாகவும் கடமையாற்றிய ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

11 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் பற்றியே இம்முறைப்பாடு தற்போது பதியப்பட்டுள்ள அதேவேளை குறித்த நபர் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

15 வயது சிறுமையை வல்லுறவுக்குட்படுத்தியிருந்த குறித்த நபர், அதற்குப் பகரமாக 1.8 மில்லியன் ரூபா பணமும் வீடொன்றும் வழங்கியிருந்ததாகவும் தற்போது அந்த வீட்டைத் திருப்பிக் கேட்டதில் இச்சர்ச்சை உருவாகியுள்ளதுடன் 11 வருடங்களின் பின் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.