நீர்கொழும்பு: இரு விபச்சார மடங்கள் சுற்றி வளைப்பு

நீர்கொழும்பு நகரில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற இரு வேறு சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் இரு விபச்சார மடங்களிலிருந்து ஒன்பது பெண்களும் ஒரு ஆண் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிசின் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு.

பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இச்சுற்றி வளைப்புகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.