ட்ரம்பின் நிகழ்வுக்கு ‘அருள்’ வேண்டி மக்கா இமாம் பிரார்த்தனை

டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்ளவுள்ள சவுதி அரேபியாவின் நிகழ்வுககு இறைவனின் அருள் கிடைக்க மக்கா இமாம் ஷேக் சலே பின் ஹம்தி ஜும்மாவின் போது பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக சவுதி அரேபிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு விவகாரங்களில் ஈரானின் தலையீடு மற்றும் யெமன் விவகாரத்தின் பின்னணியிலான முரண்பாடு தொடர்பில் நிலவும் பிளவுகளை அடிப்படையாகக கொண்டு இன்றைய ஜும்மா உரையில் இது குறித்து விளக்கமளித்துள்ள இமாம், இஸ்லாமிய மாநாடாக இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வுக்கு இறைவனின் அருள் வேண்டி பிரார்த்தித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள ட்ரம்ப், சவுதி அரேபியாவுடனான தமது உறவுகளை வளர்த்துக் கொள்வதோடு அங்கு அமெரிக்க முதலீடு மற்றும் இராணுவ ரீதியிலான தலையீட்டுத் திட்டங்களையும் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.