இனவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை; ரணில் வாக்குறுதி!

இனவாதத்தை உருவாக்குவோருக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இன்று மதியம் மன்னார் மாவட்ட செயலக கட்டிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர், அரசியல் ரீதியான தீர்வொன்றையே மக்கள் விரும்புகிறார்கள், இந்நிலையில் மத மன்றும் இனவாதத்தை உருவாக்குபவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்வரும் வாரம் முதல் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.