கட்டார் எயார்வேஸ் விமானம் கொழும்பில் அவசர தரையிறக்கம்

தாய்லாந்தின் புகெட் நகரிலிருந்து தோஹா பயணித்துக்கொண்டிருந்த கட்டார் எயார்வேஸ் விமானம் ஒன்றில் புகை தோன்றியதன் பின்னணியில் இரவு 8.27 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

208 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் இலங்கை வான்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக ஆய்வுகள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.