யுத்த வெற்றியில் மஹிந்தவுக்கு பங்கில்லை: பொன்சேகா

பிரிவினைவாதத்திற்கு எதிராக இராணுவத்தை முதலில் களமிறக்கியது ஜே.ஆர், இடையில் பல சாதக பாதகங்களுக்குப் பின்னால் இறுதி யுத்தத்தை வெற்றிகரமாக கட்டமைத்து நிறைவு செய்தது நான், இதில் மஹிந்தவுக்கு எந்தப் பங்குமில்லையென தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.

இடைக்காலத்தில் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதியரும் யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றனரே தவிர யாரும் கைவிடவில்லை, எனவே மஹிந்த ராஜபக்சவும் புதிதாக எதையும் செய்யவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.