இனவாதம்: அரசியல் தலைமைகளுக்கு மனோ கணேசன் அழைப்பு!

பொதுபல சேனா, ராவணா பலய போன்ற கடும்போக்கு அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனும் சிந்தனைப் போக்குள்ள சிங்கள தலைமைகளையும் இணைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

நேற்றைய தினம் மனோ கணேசனின் அமைச்சுக்குள் அடாவடியாகப் புகுந்த பயங்கரவாதி ஞானசார, அங்கு இலங்கை பௌத்தர்களின் நாடெனவும் ஏனையோருக்கு பௌத்தர்களின் நல்லெண்ணப் போக்கால் வாழ இடம் கிடைத்திருக்கிறது எனவும் விதண்டாவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பாரிய அசௌகரியத்துக்குள்ளான அமைச்சர், ஏனைய தலைமைகளையும் ஒன்றிணைத்து அரசியல் ரீதியாக இனவாதத்தை எதிர்கொள்ள முயற்சிக்கின்ற அதேவேளை தமது பாகுபாடுகளை மறந்து அரசியல் பிரதிநிதிகள் ஒன்றுபடுவார்களா என்பது கேள்விக்குறியே என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.