வெளிநாட்டு வேலை வாய்ப்பு; மோசடி பேர்வழி கைது!

சீஷெல்ஸில் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக பத்திரிகை மூலம் விளம்பரம் செய்து பலரிடம் பணம் பறித்த மோசடி பேர்வழியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடவத்தையில் அலுவலகம் ஒன்றை நடாத்தி வந்த குறித்த நபர், இரண்டு கோடி ரூபாவுக்கு அதிகமாக மோசடி செய்துள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை 2016 ஓகஸ்ட் மாதத்திலிருந்து 2017 பெப்ரவரி வரையிலான காலப்பகுதிக்குள் இம்மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.