நிந்தவூர்: பேக்கரி வண்டியில் சிக்கி குழந்தை பரிதாப மரணம்

நிந்தவூர் 6ம் பிரிவைச் சேர்ந்த கிண்ணியாகாரரின் பேரன், ஒன்றரை வயதுக் குழந்தை “அஜ்மல் ஹம்தான், பேக்கரி வண்டியில் சிக்கி நிவபாத்தான அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்னாலிலாஹி வஇன்னாயிலைஹி ராஜுஹுன்.

குழந்தையின் தாய் பேக்கரி வண்டியில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை வண்டிக்கு முன் நின்று கொண்டிருந்ததாகவும். இதைக் கவனிக்காது வாகனம் முன் சென்ற வேளையிலேயே இவ்வசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.

-முஹம்மட் ஜெலீல்