இணைய மூலம் கடவுச்சீட்டு ‘சேவைகள்’

கடவுச்சீட்டுக்களை புதுப்பித்தல் உட்பட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணைய மூலம் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலத்திரனியல் முறை ஊடாக கட்டணத்தை செலுத்தி இச்சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விரைவில் முழுமையான சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.