குப்பை மேட்டுக்கு நாங்கள் பொறுப்பில்லை: கோத்தா

தமது பலவீனங்களை கடந்த ஆட்சி மீது பழி போட்டுத் தப்பிக் கொள்வதை இந்த அரசாங்கம் வழக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்குத் தாமோ கடந்த ஆட்சியோ பொறுப்பாகாது என தெரிவித்துள்ளார்.

தமக்கும் முன்பதாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலிருந்து இவ்வாறு குப்பை கொட்டும் வழக்கம் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், 2008ம் ஆண்டு நீதிமன்ற ஆணையைப் பெற்றே தமது சகோதரனின் ஆட்சியில் இங்கு குப்பை கொட்டப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

26 பேர் உயிரிழந்துள் அனர்த்தம் ஏற்பட்டிருப்பதன் பின்னணியில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 2010ம் ஆண்டு தாம் கொழும்பு மாநகர சபையுடன் இது தொடர்பில் முரண்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.