ரணிலின் இஷ்டத்துக்கு 'ஆடும்' தே.ஆ.கு: JVP - sonakar.com

Post Top Ad

Friday 9 June 2023

ரணிலின் இஷ்டத்துக்கு 'ஆடும்' தே.ஆ.கு: JVP

 



ஜனநாயக முறைப்படி நாட்டில் தேர்தலை நடாத்துவதற்கன்றி தேர்தல்களை பின் போடுதற்காக தேர்தல் ஆணைக்குழு இல்லையென தெரிவிக்கிறது ஜே.வி.பி.


ஆயினும், தற்போதைய சூழ்நிலையில், ரணிலால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாகவே தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவரது இஷ்டத்துக்கே தேர்தல் ஆணைக்குழு ஆடுவதாகவும் விசனம் வெளியிட்டுளளார் டில்வின் சில்வா.


நாட்டின் பொருளாதார சூழ்நிலையைக் காரணங்காட்டி உள்ளூராட்சித் தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள அதேவேளை, அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான எதிர்பார்ப்பே நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment