3.5 கிலோ தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு 70 லட்ச ரூபா அபராதம் விதித்த சுங்கத் திணைக்களம், 4.6 கிலோ தங்கம் கடத்திய தனி நபர் ஒருவருக்கு ஏழு கோடி ரூபா அபராதம் விதித்துள்ளதாகவம் அலி சப்ரிக்கு இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது ஏன் எனவும் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றால், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாத்திரம் எவ்வாறு குறைந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கேள்வியெழுப்பியுள்ள சஜித், நாடாளுமன்றின் 224 உறுப்பினர்களும் அலி சப்ரியை இராஜினாமா செய்யக் கோரி கடிதம் எழுத ஆயத்தமானதாகவும் தெரிவிக்கிறார்.
கடத்தல் விவகாரத்தில் அரசு தனக்கு ஆதரவளிக்கவில்லையென தெரிவித்து அலி சப்ரி 'எதிர்த்து' வாக்களித்த அதேவேளை, மீளவும் தனது டுபாய் பயணங்களை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment