வில்பத்து விவகாரத்தின் பின்னணியில் மரம் நடுவதற்கான உத்தரவை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2020ம் ஆண்டு, வன அழிப்புக்குள்ளானதாக கூறப்படும் குறித்த பகுதிகளில் மீளவும் மர நடுகைக்கான உத்தரவை பிறப்பித்திருந்த நீதிமன்றம், அதற்கான செலவை ரிசாத் பதியுதீன் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
எனினும், அவ்வுத்தரவை மீறியுள்ளதாகவும் நீதிமன்றை அவமதித்துள்ளதாகவும் ரிசாதுக்கு எதிராக தற்போது மீளவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment