அரசியலை விட்டு ஒதுங்கவே மாட்டேன்: கீதா சபதம் - sonakar.com

Post Top Ad

Monday 5 June 2023

அரசியலை விட்டு ஒதுங்கவே மாட்டேன்: கீதா சபதம்

 



தான் அரசியலை விட்டு ஒதுங்கி விட்டதாக 'எதிரிகள்' மகிழ்வதாக தெரிவிக்கின்ற கீதா குமாரசிங்க, மஹிந்தவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட தான், அவரது கட்சியைக் காப்பாற்றத் தொடர்ந்தும் போராடப் போவதாக தெரிவிக்கிறார்.


தான் உயிரோடு இருக்கும் வரைக்கும் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டே இருக்கப் போவதாகவும் குருவுக்கு செய்யும் நன்றிக் கடன் அதுதான் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தந்த சஜித்தை உதறி விட்டு டயானா கமகே ஆளுங்கட்சியுடன் இணைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment