இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா முடிவுற்று மிகையாகத் தங்கியிருப்போர் ஏழு நாட்களுக்குள் புதுப்பித்துக் கொண்டால், தண்டப் பணம் எதுவும் அறவிடுவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏழு முதல் பதின் நான்கு நாட்களுக்கு 250 டொலர் அபராதமும் அதை விட அதிகமாக இருந்தால் 500 டொலரும் அறவிடப் போவதாகவும் விளக்கமளித்துள்ளார் டிரன் அலஸ்.
இலங்கைக்கான ஆறு மாத கால சுற்றுலா விசாவினை இணைய வழியூடாகவே பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment