விமலுக்கு சட்ட எச்சரிக்கை விடுக்கும் ஷவேந்திர - sonakar.com

Post Top Ad

Thursday 1 June 2023

விமலுக்கு சட்ட எச்சரிக்கை விடுக்கும் ஷவேந்திர


 


கோட்டாபய ஆட்சியைக் கலைப்பதற்கான அடிப்படையாக அமைந்த மே 9 வன்முறைகளின் பின்னணியில் சூழ்ச்சியிருப்பதாகவும் அதில் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்பு பட்டிருப்பதாகவும் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டு வரும் நிலையில் அவருக்கு சட்டரீதியான எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜெனரல் ஷவேந்திர.


விமல் வீரவன்ச தனது இஷ்டத்துக்கு இட்டுக் கட்டிய கதைகளைக் கொண்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் தொலைக்காட்சிகளிலும் இது குறித்து விளக்கமளித்து வருவதாகவும் இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் எனவும் ஷவேந்திர தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.


எனினும், தனது 'கண்டுபிடிப்புகள்' உண்மையானவையெனவே விமல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment