ஜூம்ஆத் தொழுகையை 12.45க்கு முடிக்க வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Wednesday 31 May 2023

ஜூம்ஆத் தொழுகையை 12.45க்கு முடிக்க வேண்டுகோள்

 தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜூம்ஆத் தொழுகையினை பிற்பகல் 12.45 மணியுடன் நிறைவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஜம்மியத்துல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம்இ செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினூடாக இதனை வலியுறுத்தியுள்ளனர். 


இதனையடுத்து நாட்டின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த இமாம்கள் மற்றும் உலமா சபை உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் தமது பிராந்தியங்களிலும் இதனை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


-ஏயெஸ் மெளலானா / EK

No comments:

Post a Comment