களுத்துறை மாணவி கொலை: விசாரணை துரிதம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 May 2023

களுத்துறை மாணவி கொலை: விசாரணை துரிதம்

 



களுத்துறை மாணவி கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கும் பொலிசார், குறித்த நபரை48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.


சந்தேகத்துக்கிடமான மரணம்  'அச்சுறுத்தல்' பின்னணியில் நடந்திருக்கலாம் என்று விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.


இலங்கையில் கொலைச் சம்பவங்களின் பின்னணணியை வெளியிடுவதில் ஊடகங்கள் மத்தியில் நிலவும் ஆர்வத்தினால் தொடர்ச்சியாக முரணான தகவல்கள் வெளியிடப்படும் வழக்கம் நிலவுகின்றமை, குழந்தை 'சேயா' விவகாரம் போன்று தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment