UNP முக்கியஸ்தர்களுக்கு ஆளுநர் பதவிகள் - sonakar.com

Post Top Ad

Monday 8 May 2023

UNP முக்கியஸ்தர்களுக்கு ஆளுநர் பதவிகள்

 



கடந்த பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்த போதிலும், கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஊடாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர், உற்சாகமாக இயங்கி வருகின்றனர்.


இந்நிலையில், கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஆளுநர் பதவிகள் கிடைக்கவுள்ளதாக 'தகவல்' வெளியிட்டுள்ளார் நவின் திசாநாயக்க.


அடுத்தது ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் எனக் கருதப்படுவதாலும், இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்று தலைமைத்துவப் பண்பை நிரூபித்துள்ளதாலும் ரணில் மீதான மக்கள் நம்பிக்கை அதிகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கருதுகி;றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment