ஒரு 'குரூப்' ஆக சேருங்கள்: ரணில் அறிவுரை - sonakar.com

Post Top Ad

Friday 14 April 2023

ஒரு 'குரூப்' ஆக சேருங்கள்: ரணில் அறிவுரை

 சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அரசியல் கட்சிகளை, சஜித்தையும் இணைந்து ஒரே குழுவாக மாறுமாறு ஜனாதிபதி ரவுப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நீண்ட நாட்களாக பதவிகள் எதுவுமின்றி இருக்கும் முஸ்லிம் கட்சிகள் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வரும் தொடர்ச்சியில் அண்மையில் ரணிலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையிலேயே, சஜித்தையும் இணைத்து தன்னைப் பலப்படுத்துமாறு ரணில் தெரிவித்துள்ளமையும், இப்பின்னணியிலேயே சஜித்துக்கு பிரதமர் பதவியைத் தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment