அரசுக்கு கை கொடுக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சியை அமைப்பதும், அதற்கு சமகி ஜன பல வேகய தலைமைத்துவத்தை வழங்குவதும் தவிர்க்க முடியாத காலக் கட்டாயம் என்கிறார் ராஜித சேனாரத்ன.
ரணிலுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கட்சி தாவப் போவதாக சந்தேகிக்கப்பட்ட ராஜித, தற்போது ரணில் - சஜித் இடையேயான உறவுப்பாலத்தை அமைக்க பாடு படுவதாக விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆட்சியில் பங்காளிகளாவது தவிர்க்க முடியாத காலத் தேவையென ராஜித தரப்பிலிருந்து அறிக்கை மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment