பெரமுனவினர் ரணிலை ஜனாதிபதியாக்கி தமது நலனை பாதுகாத்துக் கொண்டுள்ள போதிலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவை வேட்பாளராக்குவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பியின் வசந்த சமரசிங்க.
இந்நிலையிலேயே, தனி மனிதனாக இருக்கும் ரணில் பெரமுனவினர் கை விட்டால், தமக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய குழுவொன்றை உருவாக்க முயல்வதாகவும் அதற்காக சமகி ஜன பல வேகயவினரை அபகரிக்க முயல்வதாகவும் வசந்த மேலும் விளக்கமளித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறுவது முற்றாக கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சுக்கள் வலுவாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment